நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் டிரைவர்கள் ஊழியர்கள் மோதல் ரெயில்கள் தாமதம் பயணிகள் தவிப்பு Nagercoil railway station drivers employees fight train delay Passenger anxiety
Tamil NewsToday, 05:30
நாகர்கோவில், செப். 28-
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் என்ஜினை கழற்றி மாட்டுவது டிரைவர் பொறுப்பு என்று மெக்கானிக் துறையினரும், அது மெக்கானிக் துறையினரின் பொறுப்பு என்று ரெயில் என்ஜின் டிரைவர்களும் மாறி மாறி புகார் கூறினார்கள். இதனால் அவர்களுக்கிடையே மோதல் உருவானது.
ரெயில் என்ஜினை கழற்றி மாட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவிலிருந்து புறப்படும் ரெயில்கள் தாமதமாக சென்றது. சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றிரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
10.35 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் அதிகாலை 1.15 மணிக்கு தான் இங்கிருந்து புறப்பட்டு சென்றது. கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். ஆனால் 2.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. கொல்லம்-மதுரை செல்லும் பாசஞ்சர் ரெயில் வழக்கமாக இரவு 11 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
இந்த ரெயில் இன்று அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் வந்தது. மதுரை-கொல்லம் பாசஞ்சர் ரெயில் அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். ஆனால் இன்று காலை 7.35 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் சென்றது. குருவாயூர்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.50 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்படும்.
ஆனால் 7.55 மணிக்கு புறப்பட்டுச்சென்றது. கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஆனால் 1 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. கன்னியாகுமரி-மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.10 மணிக்கு புறப்படும். ஆனால் காலை 8.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
கன்னியாகுமரி-ஹவுரா செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயில் இன்று 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. கோவை பாசஞ்சர் ரெயில் காலை 7.25 மணிக்கும், திருவனந்தபுரம் பாசஞ்சர் ரெயில் 6.55, 7.55 மணிக்கு செல்லும். இந்த 3 ரெயில்களும் தாமதமாக சென்றது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடையும். இன்று காலையில் அந்த ரெயில் சரியான நேரத்தில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்திற்கு வந்தது. ஆனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் வசதி இல்லாததால் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்தது.
சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. நாகர்கோவிலிருந்து புறப்படும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக சென்றதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். பிளாட்பாரங்களில் ஆங்காங்கே குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர்.
கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் மிகவும் கஷ்டத்துக்கு ஆளானார்கள். பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். நாகர்கோவிலுக்கு வர வேண்டிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
காலையில் வேலைகளுக்கு செல்லும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ரெயில்கள் நிறுத்த இடவசதி இல்லாததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரெயில்கள் அனைத்தும் தாமதமாக சென்றது.
அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்து செல்லும் ரெயில்கள் தாமதம் ஏற்படுவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள், பொதுமக்களும் தரப்பில் தெரிவித்தனர். இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:- நாங்கள் வெளியூர் செல்வதற்காக குடும்பத்தோடு ரெயில் நிலையம் வந்தோம்.
ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பாதிக்கப் பட்டு உள்ளோம். ரெயில் நிலைய பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், பயணிகள் பாதிக்காத வகையில் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ரெயில் ஊழியர்கள் மோதல் பற்றி அறிந்த ஹெலன்டேவிட்சன் எம்.பி. ரெயில் நிலையத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
...
Show commentsOpen link