அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி
by admin
TamilSpyToday,
நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார்.
அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் 'ருத்ரமா தேவி' என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. டைரக்டர் கிரிஷை, அனுஷ்கா காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாயின.
கிரிஷ் தெலுங்கில் பிரபல டைரக்டராக உள்ளார். அனுஷ்காவின் வானம் படத்தை இவர்தான் டைரக்டு செய்தார். அப்போது நெருக்கம் ஏற்பட்டது.
இருவரும் தன்மையில் சந்தித்து காதல் வளர்த்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரிடமும் யார் உயர்ந்தவர் என்ற 'ஈகோ' ஏற்பட்டதால் காதல் முறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கு ஒளிப்பதிவாளர் ஒருவரையும் அனுஷ்கா காதலித்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். சினிமாவுக்கு முழுக்கு போடுமாறு ஒளிப்பதிவாளர் திடீர் நிபந்தனை விதித்ததால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது என்று தெலுங்கு சினிமா வட்டாரம் கூறுகிறது.
நயன்தாரா இனிமேல் என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று கூறியபடி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவரைப் போல் அனுஷ்காவும் இனி நடிப்புதான் என் வாழ்க்கை என்று கூறி வருகிறாராம்.
அதிசயமான மனிதர்கள் – வீடியோ…
Show commentsOpen link
