Saturday, 21 September 2013

பெங்களூரில் மனைவியை கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர் 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை Bangalore techie kills wife then jumps to death from 13th floor

- 0 comments

பெங்களூரில் மனைவியை கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர் 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை Bangalore techie kills wife then jumps to death from 13th floor
Tamil NewsToday,

பெங்களூர், செப். 21-

பெங்களூர் அருகே உள்ள ஜே.பி. நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பல் வசித்து வந்தவர் மதுசூதன். சாப்ட்வேர் என்ஜினியரான இவரது மனைவியும் சாப்ட்வேட் என்ஜினியர்தான். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவும் வழக்கம்போல் இருவரும் கடுமையாக சண்டை போட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மதுசூதன், கத்தியால் தன் மனைவியின் உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த மதுசூதன், தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்றுள்ளார். தீப்பெட்டியை கண்டு பிடிக்க முடியாததால் அந்த முயற்சியையும் கைவிட்டார். பின்னர் தான் வசித்த 13-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவர் உடல் சிதறி இறந்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது அவர்களின் 6 வயது மகள், தனது பாட்டி வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

[Continue reading...]
 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger