நைஜரில் பாலைவனத்தை கடந்து வெளிநாடுகளில் குடிபுக சென்றவர்களில் 35 பேர் தண்ணீரின்றி சாவு Migrants die of thirst in Niger crossing the Sahara
அகடெஸ், அக். 28-
ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டின் அகடெஸ் நகரிலிருந்து வறுமை காரணமாக 60 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக சஹாரா பாலைவனம் வழியாக இரு வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர். சஹாரா பாலைவனத்தின் மையத்தில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டின் டாமன்ரசட் என்ற நகரை நோக்கி சென்ற அவர்களது வாகனங்கள் ஒன்றில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து வாகனத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் பெண்கள், குழந்தைகள் என அவர்கள் கால் நடையாக பல்வேறு குழுக்களாக பிரிந்து பாலைவனத்தை கடக்க முயன்றனர். பல நாட்கள் நூற்றுக்கணக்கான மைல் பாலைவனத்தில் நடந்த அவர்களது உடலில் தண்ணீர் வற்றிய நிலையில் தொண்டை வறண்டு போனது.
இதனால் உயிருக்கு போராடிய அவர்களில் 35 பேர் குடிக்க தண்ணீரின்றி இறந்து போயினர். சிலர் மட்டும் எப்படியோ பல நாட்கள் நடந்து வழியில் இருந்த அர்லிட் நகரை அடைந்தனர். பின்னர் அவர்கள் நடந்த சம்பவத்தை ராணுவத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து செய்தி வெளியே தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டவர்கள் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
...
shared via
