Wednesday, 18 September 2013

பா.ஜ.க. அழைப்பு: ரஜினி மவுனம் வாய்ஸ் கொடுக்க தயக்கம்? bjp call actor rajini silence

- 0 comments

பா.ஜ.க. அழைப்பு: ரஜினி மவுனம் வாய்ஸ் கொடுக்க தயக்கம்? bjp call actor rajini silence

Tamil NewsToday,

பாரதீய ஜனதா அழைப்பால் ரஜினி தரப்பு அரசியல் களம் மீண்டும் சூடாகியுள்ளது. நரேந்திர மோடியை பிரதமராக்க 'வாய்ஸ்' கொடுப்பாரா என்று அரசியில் வட்டாரம் உன்னிப்பாக கவனிக்கிறது. ரஜினியும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் இருந்த போது நரேந்திர மோடி நேரில் வந்து பார்த்தார். இருவரும் போனிலும் அடிக்கடி பேசிக் கொள்கின்றனர்.

எனவே ரஜினி ஆதரவு கிடைக்கும் என பாரதீய தரப்பினர் நம்புகிறார்கள். ரஜினி ஏற்கனவே பல சந்தர்பங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த சம்பவங்கள் தமிழக அரசியலில் நடந்துள்ளன. 1996 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். அக்கூட்டணிக்கு வாக்களிக்கும்படியும் மக்களை கேட்டுக் கொண்டார்.

1998 பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ரசிகர்களையும் தேர்தல் களத்தில் இறக்கி வாக்கு சேகரிக்கச் செய்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரித்தார். எனது ஓட்டு பாரதீய ஜனதாவுக்கு என்று வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். பாட்டாளி மக்கள் கட்சியுடன் மோதல் ஏற்பட்ட போது தனி கட்சி துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவை பாரதீய ஜனதா தலைவர்கள் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் ரஜினி ஆதரவு கொடுக்க தயங்குவதாக நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு மெகா பட்ஜெட்டில் தயாரான கோச்சடையான் படம் ரிலீசுக்கு தயாராகிறது. அந்த படம் மீது தான் ரஜினியின் முழு கவனமும் தற்போது உள்ளது என்கின்றனர்.

அரசியல் முடிவுகள் எடுத்தால் படத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது. கடந்த கால அரசியல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு இப்போது தான் பகையை மறந்து எல்லா தலைவர்களுக்கும் பிடித்தமானவராக ரஜினி மாறியுள்ளார். அந்த உறவை மீண்டும் சிதைக்க ரஜினி விரும்ப மாட்டார் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர் கூறும் போது, நரேந்திர மோடி பேசினால் ரஜினி மனம் மாறி தங்களுக்கு நிச்சயம் ஆதரவு தருவார் என்றார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

பிரபாகரனை கொன்றதை போல விக்னேஸ்வரனையும் கொலை செய்வோம்- அஸ்வர் கொலை மிரட்டல் srilankan news channel

- 0 comments

பிரபாகரனை கொன்றதை போல விக்னேஸ்வரனையும் கொலை செய்வோம்- அஸ்வர் கொலை மிரட்டல்

by Marikumar
ஆண் பெண்: சில டிப்ஸ்Today,

மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். பிரபாகரனை கொன்றது போல விக்னேஸ்வரனையும் நாம் கொலை செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம் என அஸ்வர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அஸ்வர் இதனை தெரிவித்தார்.

30 வருடம் குரூர யுத்தம் நடத்தி பெற முடியாத ஈழத்தின் வடிவில், வடகிழக்கை ஒருங்கிணைத்து வேறு பகுதியைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் விக்னேஸ்வரன் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதிவிக்காகக் களமிறங்கி உள்ளார்.

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தமது பகுதிக்கு மட்டும் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கேட்கிறார். தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் ஒத்துழைப்பை அதற்காக கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். வடமாகாணத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களிக்க ஆவலாக உள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thinakkathir
Share |

Show commentsOpen link

[Continue reading...]

நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம் actress nayanthara sexy movie

- 0 comments

நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மூத்த நடிகர்களுடன் நடித்த நடிகைகளை ஓரம் கட்டுவது இளம் நடிகர்கள் வழக்கமாக உள்ளது.

திரிஷா, பிரியாமணி, ஸ்ரேயா உள்ளிட்டடோர் அந்த பட்டியலில் உள்ளனர். பெரிய நடிகர்களும் இவர்களை தற்போது கண்டு கொள்வது இல்லை. ஆனால் நயன்தாரா விதிவிலக்காக இருக்கிறார். காதல் சர்ச்சைகளில் அவர் சிக்கியதும் மார்க்கெட் சரியும் என எதிர்பார்த்தனர். ஆனால் சிறிது காலம் இடைவெளிவிட்டு வந்து பிறகும் பழைய வரவேற்பு இருந்தது.

தெலுங்கில் இளம் ஹீரோ ராணா 'கிருஷ்ணம் வந்தே' படத்தில் ஜோடியாக்கினார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இது 'கதிர் வேலன் காதல்', ஆர்யா, ஜெய்யுடன் ராஜா ராணி படங்களில் நடிக்கிறார். அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகும் 'அனாமிகா' படத்தில் நடிக்கிறார்.

மேலும் பல இளம் ஹீரோக்கள் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழ், தெலுங்கில் நயன்தாரா மார்க்கெட் இன்னும் சில வருடங்கள் வலுவாக நிலைத்து இருக்கும் என்று திரையுலகினர் கணிக்கின்றனர்.

Show commentsOpen link

[Continue reading...]
 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger