Monday, 16 September 2013

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை Bill Gates tops Forbes list of Americas richest

- 0 comments

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை Bill Gates tops Forbes list of Americas richest

Tamil NewsYesterday, 05:30
நியூயார்க், செப். 17- மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார். பெர்க்‌ஷைர் ஹாத்வே கம்பெனியின் முதலாளியான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான அராக்ள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது. ...
Show commentsOpen link

[Continue reading...]

டெல்லி பலாத்காரத்தை மையமாக கொண்ட ‘ப்ரீடம்’

- 0 comments

டெல்லி பலாத்காரத்தை மையமாக கொண்ட 'ப்ரீடம்'

Tamil news

டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் ப்ரீடம் என்ற தலைப்பில் வெளியாகிறது.
ஆர்எம்எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

டெல்லி பலாத்கார சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் ஆஜ் கி பிரீடம் என்ற பெயரிலும் தமிழில் ப்ரீடம் என்ற தலைப்பிலும் படமெடுத்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட ஜோதியின் பெயரையே கதாநாயகியின் பாத்திரப் பெயராக வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஜோதி வேடத்தில் தமிழ் பெண் ரே நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் டான் கெளதம்.

ஜோதியைப் பற்றி அமிதாப்பச்சன் ஒரு கவிதை எழுதி இருந்தார்.

அந்தக் கவிதையை இந்தி இசையமைப்பாளர் அனிருத் பதக் இசையில் பாடலாக்கி இருக்கிறார்கள்.

இந்த படத்தினை அக்டோபர் 2ம் திகதி காந்தி பிறந்த நாளில் வெளியிட உள்ளார்கள்.

Show commentsOpen link

[Continue reading...]

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை! Gayathri raguram

- 0 comments

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

டான்ஸ் மாஸ்டர் ரகுராம்-கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 'சார்லி சாப்ளின்' படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'விசில்', 'பரசுராம்', 'ஸ்டைல்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியரான தீபக் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டு அங்கே செட்டிலானார். பின்னர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு ஏற்படவே, அங்கேயே திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

திரும்பிய அவர் 'கந்தசாமி', 'காதலில் சொதப்புவது எப்படி' உள்ளிட்ட சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் 'வை ராஜா வை' படத்தில் கவுதம் கார்த்திக்-கின் அக்காவாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் மற்றும் விவேக், டைரக்டர் எஸ்.எம்.வசந்த், ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக இயக்குநர் வசந்த் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

 

Show commentsOpen link

[Continue reading...]

தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்? Danush pidiyil sivakarthikeyan

- 0 comments

தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்?

by vijigermany
New Tamil Jokes - Penmai.comToday,

தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்?

பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.

'மெரினா' படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து 'மனம் கொத்திப் பறவை', 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என வரிசையாக நடித்தார்.

'மெரினா'படம் நடிக்கும்போது சிவகார்த்திகேயனுக்கு எந்தப் பின்புலமும் இல்லை. '3' படத்தில் நடித்தபோது தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சமயத்தில் உருவான நட்பு இப்போதும் பெரிதாகப் பேசப்படுகிறது.

'என் தம்பி சிவகார்த்திகேயன்' என்று தனுஷ் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான 'எதிர்நீச்சல்' படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார் தனுஷ். அப்போது இருவரது நட்பும் இன்னும் ஆழமானது.

'என் வளர்ச்சிக்கு இவ்வளவு உறுதுணையாய் இருக்கிறாரே' என்று நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், தனுஷை தன் மானசீக குருவாகவே பார்க்கிறார்.

இப்போது படத்தின் கதை, சம்பளம் உட்பட சினிமா விஷயங்கள் குறித்து தனுஷிடம்தான் ஆலோசனையைக் கேட்கிறார். தனுஷ் சொல்லாமல் எந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் கமிட் ஆவதில்லையாம். தனுஷ் அறிவுரைப்படிதான் சம்பளம் கேட்கிறாராம்.

Show commentsOpen link

[Continue reading...]

மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு first time Indian descent win miss america

- 0 comments

மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு first time Indian descent win miss america

Tamil NewsToday,

நியூயார்க், செப்.16- அமெரிக்காவில் 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நியூயார்க் அழகியான நினா தவுலுரி (வயது 24) மிஸ் அமெரிக்கா பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும். மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற தவுலுரி கூறுகையில், மிஸ் அமெரிக்கா பட்டம் வென்றது மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது. யார் மிஸ் அமெரிக்காவாக வருவார் என டி.வி.யை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். ...
Show commentsOpen link

[Continue reading...]
 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger