'லவ்வோ லவ்வு' சிம்புவின் அலப்பறைகள்!
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தில் தான் சிம்பு 'லவ்வோ லவ்வாம்'. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்த பிறகு ரசிகர்களிடம்(முக்கியமாக ரசிகைகளிடம்) சிம்புவுக்கு பெரிய கிரேஸ் உருவானது. ஆனால் அதன்பிறகு சிம்பு அப்படி கதாபாத்திரத்தை எந்த திரைப்படத்திலும் முயற்சி செய்யவில்லை.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் அதே மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துவருகிறாராம். பாண்டிராஜ் இயகக்த்தில் நடிப்பது குறித்து சிம்பு டுவிட்டரில் " விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் எப்போதும் கேட் அருகே நிற்பேன். பாண்டிராஜ் படத்தில் எப்போதும் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன்.'லவ்வோ லவ்வு'. பாண்டிராஜ் படத்தில் காதலர்களுக்குள் நடக்கும் ஃபோன் உரையாடல்கள் தான் ஹைலைட்டாக இருக்கும்" என்று டுவீட் செய்திருக்கிறார்.
'நூறு பொண்ண கரெக்ட் பன்றது கூட இன்னைக்கு ஈஸி. ஆனா ஒரு பொண்ண மெயின்டெயின் பன்றதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம்" என்றும் ஒரு டுவீட்டில் கூறியிருக்கிறார். சிம்புவின் இந்த டுவீட்டைப் பார்த்த ரசிகர்கள் சிம்பு சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசுகிறாரா? படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகிறாரா? என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.
shared via
