Friday, 27 September 2013

முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு ! $50,000 prize

முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு !

by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

ரொறொன்ரோ மற்றும் வன்குவர் நகரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இரு முக்கிய பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னமும் பிடிபடாமல் இருப்பதால் இந்தக் குற்றவாளிகளை அடையாளங் காட்ட உதவுபவர்களுக்கு $50,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என ரொறொன்ரோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

1985 முதல் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியின் மாதிரி உருவப்படத்தையும் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபரின் மரபணு மாதிரியும் காவல்துறை வசம் இருப்பதால் அடையாளங் காட்டுவோருக்கு தகுந்த சம்மானம் வழங்கப்படும் என்பதையும் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

The post முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger