அசிங்கமான சூப்பர் ஸ்டாரா ரஜினி..? பாலிவுட் இயக்குனரின் கருத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
அசிங்கமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பாலிவுட் தயாரிப்பாளர் கூறிய கருத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் கமால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.
இவர் தேஷ்துரோஹி என்ற இந்திப் படத்தைத் தயாரித்தவர். ஆனால் இந்தப் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் என்று கூறி படத்தை மகாராஷ்டிர அரசு தடை செய்து விட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது கலாட்டாக்களுக்கு அளவே இல்லை.
ஒருமுறை ரோஹித் ஷெட்டி என்பவர் மீது பாட்டிலை தூக்கி அடிக்க முயன்றபோது அது குறி தவறி பக்கத்தில் இருந்த நடிகை ஷமீதா ஷெட்டி மீது பட்டு அவர் துடித்தார்.
இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் இந்த கமால் கான்.
இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து அசிங்கமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார் இந்த கலாட்டாக்காரர்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் சார் சூப்பரான சூப்பர் ஸ்டாரா இல்லை இருப்பதிலேயே மோசமான சூப்பர் ஸ்டாரா என்று எனக்கு கருத்து தெரிவியுங்கள் என்று எழுதியுள்ளார் கமால்.
இந்தக் கருத்து ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மொழி, மாநில பேதம் இல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் கமாலின் டுவிட்டர் பக்கத்தை உண்டு, இல்லை என்று செய்து வருகின்றனராம்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment