பி.சி.சி.ஐ. தலைவராக சீனிவாசன் மீண்டும் வந்தால் இந்திய கிரிக்கெட் அழியும்: லலித் மோடி எச்சரிக்கை N Srinivasans re election will be doomsday for Indian cricket says Lalit Modi
Tamil NewsYesterday, 05:30
புதுடெல்லி, செப். 23-
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக என்.சீனிவாசன் 2011-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவிகாலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.
இதில் சரத்பவாரின் ஆதரவுடன் ஷசாங் மனோகர் போட்டியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைவரான சீனிவாசனும் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தமுள்ள 31 வாக்குகளில் 16 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார்.
இதற்கிடையே என்.சீனிவாசன் தலைவராக தொடர உறுப்பினர்கள் யாரும் பொதுக்குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அவர் மேலும் ஒரு ஆண்டு பதவியில் நீட்டிக்க விதிமுறையில் வழிவகை உள்ளது. ஆனால் 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் என். சீனிவாசனுக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் என்.சீனிவாசனுக்கு ஒருசில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, "சீனிவாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டால், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஏமாற்றம் அடைவார்கள். ஒரு தவறான செய்தி பரப்பப்படும். அது இந்திய கிரிக்கெட்டின் இறுதி நாளாக இருக்கும்" என்று தனது வழக்கமான பாணியில் எச்சரித்துள்ளார்.
"இந்திய கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டுள்ளது. நம்மை உலகமே கவனித்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் வீரர்களின் அழைப்பை தென்மாநிலத்தைச் சேர்ந்த என் சக நிர்வாகிகள் புறக்கணிப்பது வியப்பாக உள்ளது. கறைபடிந்த ஒருவருக்கு இன்னும் ஆதரவு அளிக்கிறார்கள்" என்று மறைமுகமாகத் தாக்கினார் மோடி.
...
Show commentsOpen link

0 comments:
Post a Comment