நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா?: இல.கணேசன் பேட்டி Will Rajinikanth support Narendra Modi Ganesan interview
Tamil NewsYesterday,
சென்னை, செப்.18- பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பதிலளித்தார். குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியின் 64-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் பா.ஜ.க. வினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பிறந்தநாளையொட்டி பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:- கேள்வி: நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிப்பார் என்பது போன்ற செய்திகள் திடீரென்று பரவலாக வெளிவந்துள்ளதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: ரஜினிகாந்த் நடிப்பு துறையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட, அதற்கு அப்பாற்பட்டு அவருடைய வார்த்தைகளை மதிக்கின்ற ஒரு பெரிய கூட்டம் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருக்கிறது என்பது உண்மை. ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். ஆனால் அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி. நாட்டின் நலன் குறித்து அக்கரைபடுபவர். யாரெல்லாம் நாட்டின் நலன் குறித்து அக்கரைப்படுகிறார்களோ? அவர்களெல்லாம் இன்றைய பாரதத்தின் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். அந்தவகையில் நாட்டின் நலன் கருதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றம் தேவை என கருதி மோடிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்பது தான் அவரை புரிந்து கொண்டவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை. நரேந்திரமோடியின் இந்த பிறந்த நாளையொட்டி பத்திரிகை மூலமாக மக்கள் உணர்வுகளை அவருக்கு தெரியப்படுத்துவதற்கு கிடைத்திருக்கிற வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். எனது நம்பிக்கையும், தேச பக்தர்களது நம்பிக்கையும் வீணாகாது என நான் கருதுகிறேன். இவ்வாறு இல.கணேசன் கூறினார். ...
Show commentsOpen link

0 comments:
Post a Comment