தாய்லாந்து: உல்லாச நகரமான பட்டயா கடலில் சுற்றுலா படகு கவிழ்ந்து 6 பேர் பலி 6 dead as tourist ferry sinks in Pattaya
பாங்காக், நவ.4-
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் தாய்லாந்தில் உள்ள பட்டயா நகரம் சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது.
கண்ணை கவரும் கடற்கரையோர எழில் மிகும் இயற்கை காட்சிகள், மது, காபரே, விபச்சாரம் என உல்லாச விரும்பிகளுக்கு பட்டயா தாராள விருந்தளிப்பதால் தாய்லாந்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே போகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினர் தாய்லாந்துக்கு வந்து உல்லாசமாக பொழுதை கழித்து சென்றுள்ளனர். இவர்களில் ரஷ்ய நாட்டினரின் எண்ணிக்கை சற்று அதிகம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பட்டயா கடற்கரை நகருக்கும் சுமார் 100 சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த படகு கோலர்ன் என்ற தீவின் அருகே நேற்று மாலை இயந்திர கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிலரை மீட்டனர். பலரை மீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
...
shared via
0 comments:
Post a Comment