டெல்லி பலாத்காரத்தை மையமாக கொண்ட 'ப்ரீடம்'
Tamil news
டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் ப்ரீடம் என்ற தலைப்பில் வெளியாகிறது.
ஆர்எம்எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.
டெல்லி பலாத்கார சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் ஆஜ் கி பிரீடம் என்ற பெயரிலும் தமிழில் ப்ரீடம் என்ற தலைப்பிலும் படமெடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட ஜோதியின் பெயரையே கதாநாயகியின் பாத்திரப் பெயராக வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஜோதி வேடத்தில் தமிழ் பெண் ரே நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் டான் கெளதம்.
ஜோதியைப் பற்றி அமிதாப்பச்சன் ஒரு கவிதை எழுதி இருந்தார்.
அந்தக் கவிதையை இந்தி இசையமைப்பாளர் அனிருத் பதக் இசையில் பாடலாக்கி இருக்கிறார்கள்.
இந்த படத்தினை அக்டோபர் 2ம் திகதி காந்தி பிறந்த நாளில் வெளியிட உள்ளார்கள்.
Show commentsOpen link

0 comments:
Post a Comment