மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு first time Indian descent win miss america
Tamil NewsToday,
நியூயார்க், செப்.16- அமெரிக்காவில் 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நியூயார்க் அழகியான நினா தவுலுரி (வயது 24) மிஸ் அமெரிக்கா பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும். மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற தவுலுரி கூறுகையில், மிஸ் அமெரிக்கா பட்டம் வென்றது மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது. யார் மிஸ் அமெரிக்காவாக வருவார் என டி.வி.யை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். ...
Show commentsOpen link

0 comments:
Post a Comment