பிரபாகரனை கொன்றதை போல விக்னேஸ்வரனையும் கொலை செய்வோம்- அஸ்வர் கொலை மிரட்டல்
by Marikumar
ஆண் பெண்: சில டிப்ஸ்Today,
மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். பிரபாகரனை கொன்றது போல விக்னேஸ்வரனையும் நாம் கொலை செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம் என அஸ்வர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அஸ்வர் இதனை தெரிவித்தார்.
30 வருடம் குரூர யுத்தம் நடத்தி பெற முடியாத ஈழத்தின் வடிவில், வடகிழக்கை ஒருங்கிணைத்து வேறு பகுதியைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் விக்னேஸ்வரன் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதிவிக்காகக் களமிறங்கி உள்ளார்.
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தமது பகுதிக்கு மட்டும் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கேட்கிறார். தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் ஒத்துழைப்பை அதற்காக கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். வடமாகாணத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களிக்க ஆவலாக உள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Thinakkathir
Share |
Show commentsOpen link

0 comments:
Post a Comment