Thursday, 12 September 2013

Electricity workers strike in Andhra Pradesh 850 villages affect power cut

ஆந்திராவில் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 850 கிராமங்கள் இருளில் மூழ்கியது Electricity workers strike in Andhra Pradesh 850 villages affect power cut Tamil NewsToday,

நகரி, செப். 13–ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், பஸ் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.44–வது நாளாக இவர்களது போராட்டம் நீடிக்கிறது.இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மின்சார ஊழியர்களும் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் பணிபுரியும் 1 லட்சம் மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.ஆஸ்பத்திரி, குடிநீர் விநியோகம், ரெயில் போக்குவரத்து, விவசாய பணிகள் உள்பட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப் பட்டது.பல மின் உற்பத்தி நிலையங்களில் பணிகள் முற்றிலும் முடங்கியது. காவலாளி உள்பட உயர் அதிகாரிகள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மின் விநியோகம், பராமரிப்பு, உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது.ஸ்ரீகாகுளம், பிரகாசம், விசாகப்பட்டிணம் உள்பட பல மாவட்டங்களில் 850 கிராமங்கள் நேற்று இருளில் மூழ்கியது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மட்டும் 85 கிராமங்களில் இருளில் மூழ்கியது.ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒருபுறம் நடக்க பல மின்சார உற்பத்தி நிலையங்களில் தொழில் நுட்பம் காரணமாக மின்சார உற்பத்தி முடங்கியது. நிலக்கரி சப்ளை இல்லாததால் விஜயவாடா மின்நிலையம் செயப்படவில்லை. ஸ்ரீசைலம் மின்நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியிலும் மின்சாரப் விநியோகம் தடைபட்டதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இன்று நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது.மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாளை வரை நீடிக்க உள்ளது. ஸ்டிரைக் முடிந்தாலும் மின் விநியோகம் சீராக மேலும் 10 நாள் ஆகும் என்று கூறப்படுகிறது. ... Show commentsOpen link

0 comments:

Post a Comment

 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger