சென்னையில் தடையை மீறி போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது thirumavalavan including 500 people arrested
சென்னையில் தடையை மீறி போராட்டம்: திருமாவளவன் உட்பட 500 பேர் கைது thirumavalavan including 500 people arrested சென்னை, செப். 12–விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் அதிகாரத்தை எண்ணை நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.டீசல், பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசை கண்டித்து திருமாவளவன் கோஷங்களை எழுப்பினார். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்று கண்டன குரல் எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், நிர்வாகிகள் பாவரசு, பாலசிங்கம், இரா.செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி, இளஞ்சேகுவாரே, விடுதலை செழியன், கடம்பன், சவுந்தர், கபிலன், வீர.ராஜேந்திரர் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
0 comments:
Post a Comment