இந்திய கிரிக்கெட் வாரியத்தை கெஞ்சாதீர்கள்: அக்தர் அதிரடி பேட்டி Stop running after BCCI Shoaib Akhtar
Tamil News
கராச்சி, செப். 13- 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 21-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் வோல்வ்ஸ் அணிக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த அணியினர் நம்பிக்கையுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- எல்லா நேரங்களிலும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பின்னால் நாம் ஓட வேண்டிய தேவையில்லை என்று எப்பொழுதும் நான் சொல்லி வருகிறேன். இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர், ஐ.பி.எல். போட்டியில் நமது வீரர்கள் பங்கேற்பது, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நமது அணி கலந்து கொள்வது உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக நாம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கெஞ்சுவதை நிறுத்தி கொள்ள வேண்டியது அவசியமானதாகும். பைசலாபாத் அணிக்கு விசா வழங்கப்படாததில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. இரு நாட்டு அரசுகள் இடையே சுமுகமான உறவு ஏற்படும் வரை இந்திய கிரிக்கெட் வாரியம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய அரசின் கொள்கையை அப்படியே பின்பற்றி வருகிறது. சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு நமது அணியை அழைத்த போதே முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்க வேண்டும். இந்தியாவுடனான விவகாரங்களில் நாம் சுயமரியாதையுடன் செயல்பட வேண்டும். சில ஆயிரம் டாலர்களுக்காக இந்தியா பின்னால் செல்வதை விடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், நிர்வாகத்தையும் பலப்படுத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்த வேண்டும். நமது அணியை உலக அளவில் பலம் வாய்ந்ததாக உருவாக்கினால், மற்ற அணிகள் நம்மை தேடி வரும். இம்ரான்கான் போன்ற வலுவான கேப்டன் பாகிஸ்தான் அணிக்கு இல்லாதது பெரிய பிரச்சினையாகும். மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய முன்மாதிரியான வீரர் நமது அணியில் இல்லை. இம்ரான்கான் போல் இந்திய அணியின் கேப்டன் டோனி கேப்டனாகவும், வீரராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய கிரிக்கெட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவ்வாறு சோயிப் அக்தர் கூறினார். ...

0 comments:
Post a Comment