செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தாவுக்கு பிடிவாரண்ட் Cheque cheating case preity zinta
Tamil News
மும்பை, செப். 12- இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா தனது படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் அப்பாஸ் டயர்வாலாவுக்கு ரூ.18.9 லட்சத்துக்கான காசோலை கொடுத்திருந்தார். அந்த காசோலையை அப்பாஸ், வங்கியில் செலுத்தியபோது அந்த கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது. இதையடுத்து பிரீத்தி ஜிந்தா மீது அப்பாஸ் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி பிரீத்தி ஜிந்தாவுக்கு 4 முறை கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைசியாக அவரை ஆஜராக வரும்படி சம்மன் அனுப்பியபோது அவர் வராததால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் இன்று ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இன்றும் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரீத்தி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். "பிரீத்தி வெளிநாட்டில் இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தேன். ஆனால், அவருக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய கோர்ட்டில் முறையிடுவோம் அல்லது மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்வோம்" என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மணி ரத்னத்தின் 'தில் சே' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை பிரீத்தி ஜிந்தா, கடைசியாக பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவான 'இஷ்க் இன் பாரிஸ்' படத்தில் நடித்துள்ளார். ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் பிரீத்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...
Show commentsOpen link

0 comments:
Post a Comment