Thursday, 12 September 2013

திருவண்ணாமலை அருகே ஆட்டோ பைக் மோதல்: கணவன் மனைவி பலி Near Tiruvannamalai Auto bike accident husband wife died

திருவண்ணாமலை அடுத்த அப்புபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது32). இங்கு சைக்கிள் கடை வைத்திருந்தார். இவரது மனைவி பச்சையம்மாள்(23). பச்சையம்மாளின் தம்பி திருமணம் பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.

இதில் முருகேசனும், பச்சையம்மாளும் கலந்து கொண்டனர். இரவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். சு.ஆண்டாபட்டு அருகில் வந்த போது எதிரே வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பச்சையம்மாள் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். முருகேசன், ஆட்டோ டிரைவர் அன்பழகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இங்கு முருகேசன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெரைïர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கணவன்-மனைவி பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் அப்புபட்டு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger