Thursday, 12 September 2013

ragging horrible student death Principal arrested

ராகிங் கொடுமையால் மாணவி சாவு எதிரொலி: கொல்கத்தா பள்ளி முதல்வர் கைது ragging horrible student death Principal arrested

Tamil News

கொல்கத்தா, செப். 12- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஓயிண்டிரிலா தாஸ் என்ற மாணவியை சீனியர் மாணவிகள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். கடந்த வாரம் இவ்வாறு அவரை ராகிங் செய்த மாணவிகள், அவரை பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர். வெகுநேரம் தனி அறையில் அடைபட்டிருந்ததால் அதிர்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பள்ளி முதல்வர் ஹெலன், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் மாணவியின் பெற்றோர் சமாதானம் அடையவில்லை. பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாய் வலியுறுத்தினார். மேலும் டாக்டர்கள் தன் மகளுக்கு தவறான ஊசி போட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து பள்ளி முதல்வர் ஹெலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய கல்வியமைச்சர் பிரத்யா பாசு, துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்திற்கான காரணமான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.  ...

0 comments:

Post a Comment

 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger