Thursday, 12 September 2013

ஆக்சன் காட்சிகளில் நடிக்க காஜலுக்கு டிப்ஸ் வழங்கிய

ஆக்சன் காட்சிகளில் நடிக்க காஜலுக்கு டிப்ஸ் வழங்கிய

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமான காஜல்அகர்வால், அதையடுத்து தென்னிந்தியா மற்றும் இந்தி சினிமாவரை பரவலாக நடித்த போதும், காதல், காமெடி கலந்த கதைகளிலேயே நடித்து வந்தார். அதனால் ஆக்சன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது அவருக்குள் தீராத ஆசையாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தில் அவரை போலீஸ் கெட்டப்பில் நடிக்க கேட்டார்களாம். அதனால் மிகுந்த உற்சாகமடைந்த காஜல், சம்பளம் பற்றிகூட பேசாமல் உடனே கால்சீட்டை வாரி வழங்கியிருக்கிறார். அதையடுத்து, போலீஸ் கெட்டப்புக்காக போலீஸ் காஸ்ட்டியூம் அணிந்தபோது அவர் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லையாம்.

அதோடு ஸ்பாட்டுக்கு அவர் போலீஸ் கெட்டப்பில் சென்றபோது, விஜய், மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் இந்த கெட்டப்பில் அசத்தலாக இருப்பதாக கருத்து சொன்னார்களாம். அதோடு, ஆக்சன் காட்சிகளில் எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்றும் டிப்ஸ் வழங்கினார்களாம். அதையடுத்து, சண்டை காட்சிகளில் எதிரிகளை விஜய்சாந்தி பாணியில் அடித்து துவம்சம் செய்தபடி நடித்துள்ளாராம் காஜல்.

இதைத்தொடர்ந்து, இனிமேல் வெறும் ரொமான்ஸ் கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்காமல், விஜயசாந்தி பாணியில் அதிரடி ஆக்சன் கதைகள் கிடைத்தாலும் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு சில அபிமான டைரக்டர்களிடம் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார் காஜல்.

Visit website

0 comments:

Post a Comment

 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger