உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் food security bill president approved
புதுடெல்லி, செப். 12- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவு திட்டமாக கருதப்படும் உணவு பாதுகாப்பு மசோதா, கடும் அமளிக்கிடையே கடந்த 26-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்ததார். இதனால் உணவு பாதுகாப்பு மசோதா, சட்ட அந்தஸ்து பெற்று உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், முன்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் காலாவதியானது. நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உணவு கிடைக்க இந்த மசோதா வகை செய்கிறது. குறிப்பாக 50 சதவீத நகர்ப்புற ஏழைகளுக்கும், 75 சதவீத கிராமப்புற ஏழைகளுக்கும் மலிவு விலையில் உணவு தானியம் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. ...
Visit website

0 comments:
Post a Comment