Thursday, 12 September 2013

பெண்ணிடம் செக்ஸ் குறும்பு: இந்திய என்ஜினீயருக்கு ஜெயில் girl molesting Freak Indian engineer jail

இந்தியாவை சேர்ந்த என்ஜினீயரான ஸ்ரீனிவாசா எஸ்.எர்ராமில்லி (46) என்பவர் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவர் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் சிகாகோவிற்கு விமானத்தில் சென்றார். இவரது இருக்கைக்கு அருகே 62 வயது பெண் தனது கணவருடன் பயணம் செய்தார். அப்போது பெண் பயணியை அவர் 3 தடவை செக்ஸ் குறும்பு செய்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜான் எச்.லிப்கோவ் விசாரித்து ஸ்ரீனிவாசாவுக்கு 9 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை நிறைவேறிய பிறகு ஓராண்டு கண்காணிப்பு செய்து அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger